Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை. மாறாக, உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டளைகளை இராணுவத்தினருக்கு வழங்கியவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கான பரிந்துரையையும் மக்ஸ்வெல் பரணகம குழு முன்வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விவாதம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கே உரித்தான பாணியில் உள்ளக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அத்தகைய விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாலச்சந்திரனைக் கொலை செய்ய உயர்மட்டமே உத்தரவிட்டது: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com