Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துள்ள கீதா இன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தான் ரயிலில் சென்று தொலைந்துபோன கீதா அங்கு இஸ்லாமியப் பெண்ணாக வளர்ந்தார். இவரைத் தேடும் முயற்சியில் இருந்த காவல்துறை இவரைக் கண்டறிந்த நிலையில் இவர் மீது 4 குடும்பங்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. ஆனால், இவர் நேற்று பாகிஸ்தானிலிருந்து அழைத்து வரப்பட்டவுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது வாய் பேச முடியாது, காது கேளாத கீதாவுக்கு தமது பெற்றோரை அடையாளம் காண்பிக்க முடியவில்லை.

எனவே, மரபணு சோதனையின் மூலம் கீதாவின் பெற்றோர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முடிவு வெளியாக 10 நாட்கள் ஆகும் என்பதால் கீதா தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பார் என்று தெரிய வருகிறது.இதற்கிடையில் இன்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கீதா சந்தித்து உரையாடினார்.மரியாதை நிமித்தம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் அவர் சந்திப்பார் என்று தெரிய வருகிறது.

0 Responses to பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துள்ள கீதா இன்று கெஜ்ரிவாலை சந்தித்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com