Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் பருப்புப் பதுக்கல்காரர்களைக் தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட பருப்புப் பதுக்ககாரர்களைக் கண்டறிந்தது மத்திய அரசு. இதுக்குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் பருப்புப் பதுக்கல்காரர்களைக் மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை. இதில் தமிழக அரசும் அடக்கம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பருப்பு விலை மிகக் கடுமையாக உயர்த்தி விற்கப்படுகிறது.

மாநில அரசுகள் தங்கள் மீதுக் குறைகளை வைத்துக்கொண்டு மத்திய அரசை குறைக்கூறி வருகிறது என்றும் தமிழிசை மேலும் கூறியுள்ளார். இன்னும் 15 நாட்களில் பருப்பு விலையைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.இதற்கிடையில் இன்று கர்நாடகாவின் குல்பர்காவில் 20 ஆயிரம் குவிண்டால் பருப்புப் பதுக்கலைக் கண்டறிந்து உள்ளது மத்திய அரசு என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் பருப்புப் பதுக்கல்காரர்களைக் தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை: தமிழிசை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com