Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியன்மார் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 113 பேரின் உடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மியான்மரின் கச்சின் பகுதியில், மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு குவிக்கப்பட்ட மண் குன்றுகளில் சரி ஏற்பட்டது. இதற்குள், மாணிக்கக் கற்கள் அகழ்வுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிக்கினர். அத்தோடு, அப்பகுதியில் இருந்த ஏராளமான குடிசைகளும் மண்ணுக்கு அடியில் புதையுண்டன.

மீட்புப் பணியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 113 உடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சுமார் 30 குடிசைகள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Responses to மியன்மார் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 113 பேரின் உடலங்கள் மீட்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com