மாலியில் பமகோ நகரில் உள்ள உணவக விடுதி ஒன்றில் புகுந்த 2 இஸ்லாமிஸ்டு ஆயுததாரிகள், 170 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
பணயக் கைதிகளாக சிக்கியிருப்பவர்களில் 140 விருந்தினர்களும், 30 பணியாளர்களும் அடங்கியிருப்பதாகவும், தற்போது அவ்விடுதியை சுற்றிவளைத்துள்ள காவல்துறையினர் ஆயுத தாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம், மாலியின் செவாரே மத்திய நகரில் சந்தேகத்துக்குரிய ஆயுததாரிகள், அங்குள்ள உணக விடுதி ஒன்றில் புகுந்து நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 5 ஐ.நா பணியாளர்கலும் அடங்குவர்.
மாலியின் வடக்குப் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றியிருந்த இஸ்லாமிஸ்டு ஜிதாஹிஸ்துக்கள், கடந்த 2013ம் ஆண்டு மாலியின் தலைநகர் பமாகோவை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியதை அடுத்து, தனது முன்னாள் காலனித்துவ நாடான பிரான்ஸின் உதவியை மாலி அரசு நாடியிருந்தது.
இதையடுத்து மாலியின் தெற்குப் பகுதிகளை ஆயுததாரிகள் கைப்பற்றுவதை தடுக்கும் வகையிலும் அவர்கள் ஏற்கனவே கைப்பற்றியிருந்த திம்புக்து, கிடால், காவோ, தாரேக்ஸ் பகுதிகளை அவர்களிடமிருந்து மீட்கும் முயற்சிலும், பிரான்ஸ் இராணுவம் மாலியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையிலேயே பமாகோ நகர் மீது இந்த அதிரடி தாக்குதலை இஸ்லாமிஸ்டு ஆயுததாரிகள் நிகழ்த்தியுள்ளனர்.

0 Responses to மாலியில் 170 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஆயுததாரிகள்!