மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பழி பாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டிய ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் உரிய கேள்விப் பத்திரங்கள் இன்றி ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு புதிய அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும, மலையக நெடுஞ்சாலை அபிவிருத்தி தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “மலையக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சீன நிறுவனம் ஒன்றுக்கு கேள்விப்பத்திரம் இன்றி இதனை அமைக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாயின் நஷ்டஈடு வழங்கவேண்டும். எனவே கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தத்துக்கு அமைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இருந்தபோதும் குறித்த நிறுவனத்துக்கு வழங்காத ஏனைய பகுதிகளை உள்ளூர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியும் பெறப்பட்டிருக்கின்றது. கடந்த அரசாங்கத்தின் பழி பாவங்களையும் சுமக்கவேண்டிய நிலைமை தற்போதைய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசாங்கத்தின் பழிபாவங்களை புதிய அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளது: ரணில்