முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாச ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
சரத் பொன்சேகாவின் குறித்த கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகாவுக்கு எதிராக விஜயதாச ராஜபக்ஷ மன நஷ்ட வழக்கு!