Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீலால் தந்தெனிய தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை சம்பந்தமாக சந்தேகநபர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், இவர்களில் அறுவருக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஹெட்டியாரச்சிகே சந்தன குமார, காமினி செனவிரத்ன, பிரதீப் சந்தன ஆகிய மூன்று கடற்படை உறுப்பினர்களுக்கும் பெமியன் ஹுசேன் என்ற பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பழனித்தம்பி சுரேஷ் மற்றும் சிவநேசன் விவேகானந்தன் ஆகியோருக்கும் எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் விடுதலை செய்வது குறித்து சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் ரவிராஜ் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் என்று கூறப்பட்ட கடற்படை அதிகாரியும் ஒருவரும் உள்ளார் என்று பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்கு; 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com