Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேஷியாவின் எரிமலைச் சிதறலால் பொருளாதாரம் பாதிக்கும் என்று அந்நாடு கவலை தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் தீவுகளில் அடிக்கடி எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது. இதனால் நாடு முழுவதும் புகை மண்டலம் போல காட்சி அளிக்கிறது. இந்த எரிமலைகள் வெடித்துச் சிதறுவதால் 30 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நாசமாகி பணப்பயிர்கள் கருகி உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

பாமாயில், ரப்பர், காகித மரங்கள் வேரோடு கருகி நாடு முழுவதுமான விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ள இந்தோனேஷியா, அத்தனையும் பணப்பயிர்கள் என்பதால், இதன் நாச விளைவு இந்தோனேஷியா பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

0 Responses to இந்தோனேஷியாவின் எரிமலைச் சிதறலால் பொருளாதாரம் பாதிக்கும்: அந்நாடு கவலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com