Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 61வது பிறந்த தினம் இன்று. இந்த நிலையில், அவரை வாழ்த்தும் சுவரொட்டிகள் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்க!', 'தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தலைவர் வாழ்க!!' போன்ற வாசகங்கள் குறித்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61வது பிறந்த தினம் இன்று; வடக்கு- கிழக்கில் வாழ்த்துச் சுவரொட்டிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com