தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர் செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆ.க.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தற்சமயம் கொழும்பில் இருப்பதால், அவர் சார்பாகவும், அவரின் கட்டளையின் பிரகாரமும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மூடப்படும் பாடசாலைகளின் பதில் வகுப்பு தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மாற்று ஒழுங்குகளை அறிவிப்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to செந்தூரனுக்கு அனுதாபம் தெரிவித்து வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!