தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை. அதனாலேயே, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு காலம் தாழ்த்துகின்றனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் தலையீடு இருக்கும் போது, சட்டமா அதிபரை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான விடயம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருப்பதாக கூறியிருந்தார்.
நீதியமைச்சரின் குறித்த கூற்று தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காலம் எடுப்பதற்கான காரணம் அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் அங்கு இல்லை. அதனால் தான் அரசாங்கம் சாட்சியங்களை பெற முயற்சிக்கின்றது.
சாட்சியங்களைப் பெற்றால் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கினை பதிவு செய்ய கூடியதாக இருக்கும். எனவே, அரசியல் ரீதியாக கைதுசெய்யப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் அரசியல் ரீதியான தீர்மானத்தினைத் தரவேண்டும். அந்த தீர்மானம் எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்