Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஓடிய இரத்தம் போதாதா, மீண்டும் இரத்த வெள்ளத்தை ஏற்படுத்த மாணவர்களைத் தூண்டி விட்டு அவர்களை ஏன் கொலை செய்ய திட்டமிடுகின்றீர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி ஆவேசமான கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற அமர்வின்போது, உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான அணியினர் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

இதன்போது ஆவேசமான கடுந்தெனியில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “மாணவர்களை கொல்லப் பார்க்கின்றீர்களா? மூதூர் மாணவர்களின் படுகொலைகள் உங்களுக்கு போதாதா?, இன்னும் உங்களுக்கு இரத்த வெள்ளம் ஓட வேண்டுமா? ஏன் சடலங்களை தேடி ஓடுகின்றீர்கள்? மாணவர்களை மோசமாகத் தாக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு பயிற்சி கொடுத்தது யார்? இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக அப்போது எம்மைக் குற்றம் சாட்டிய நீங்கள் இன்று இராணுவத்தை குற்றம் சாட்டுகின்றீர்களே உங்களுக்கு வெட்கம் இல்லையா?” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ஆட்சியில் ஓடிய இரத்தம் போதாதா?; பாராளுமன்றத்தில் ரணில் ஆவேசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com