முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அவுஸ்திரேலிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டைவிட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்த குமார் குணரட்னம், தனக்கு இலங்கையில் அரசியல் செய்ய உரிமையுண்டு என்று தெரிவித்து தங்கியிருந்தார்.
1987- 1989ஆம் ஆண்டு காலத்தில் குமார் குணரட்னம் திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவராக செயற்பட்டிருந்தார். 2011ம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய அவர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றார். கடந்த ஜனவரி மாதம் 01ஆம் திகதி குமார் குணரட்னம் சுற்றுலா வீசாவின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்து, ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to குமார் குணரட்னம் கைது!