Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தொடர்ந்தும் பாதுகாத்துச் செல்வதே எமக்கு முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயம். ஆனால், அந்த அதிகாரத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மிகவும் கடினமாக விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு ஒத்துழைத்தவர்களில் ஒருவரான தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘கிரேட் நவம்பர் ரெவலியூஷன்’ என்ற புத்தக வெளியீடு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாவது, “மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதை மனதில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டியது அவசியமானது. நாம் இதற்கான ஆரம்பத்தையே தற்பொழுது ஏற்படுத்தியிருக்கின்றோம்.

ஆரம்பித்திருக்கும் இந்தப் பயணம் இன்னும் நீண்டதூரம் தொடரவேண்டியுள்ளது. நல்லதொரு ஆரம்பம் என்பதால் பயணம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனினும் அரசாங்கத்தின் இந்தப் பயணத்தைக் குழப்புவதற்கு சிலர் இருக்கின்றனர். இருந்தாலும் நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்லவதற்கு இடமளிக்கப் போவதில்லை. நாம் தற்பொழுது புதிய பாதையிலேயே பயணித்து வருகின்றோம்.

கடந்தகாலம் என்பது முடிந்துவிட்டதொன்று. 1956ஆம் ஆண்டில் இடம்பெற்றவை முடிந்துவிட்டன. 1977இல் இடம்பெற்றவையும் முடிந்துவிட்டன. 2015ஆம் ஆண்டு ஜனவரி புதியதொரு பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணத்தின் ஊடாக புதிய உலகத்துக்கு எவ்வாறு முகங் கொடுப்பது என்பதையே தற்பொழுது சிந்திக்கவேண்டியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நிலைமையைத் தொடர்ந்தும் பாதுகாத்துச் செல்வதே எமக்கு முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும். இதற்கு அடுத்தது மக்கள் எதிர்பார்க்கும் கொள்கைகளைப் பெற்றுக்கொடுப்பது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பாதுகாப்பது சவாலானது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com