மரணித்த தமது உறவுகளுக்கு ஈமக்கடன் நிறைவேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு. அதனை, யாரும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மரணித்தவர்களை மதிக்காமல் அதனைத் தடுக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை இழந்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூரும் மாவீரர் தினம் நாளை வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது நடப்பது நல்லாட்சி என்பது உண்மையாயின், தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் சுதந்திரம் உள்ளது. இவற்றை தடுப்பது பாரிய மனித உரிமை மீறலாகும்.
இந்நிலையில், மரணித்தவர்களை நினைவுகூருவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும். நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும். இதனை இந்த அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு: சம்பந்தன்