தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலரும், கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளில் புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பமானவர்களில் முதல் தொகுதியினரை புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்றுடன் முடிவடைகின்றது. 2009ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சரணடைந்தவர்களையே புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும். அவ்வாறு புனர்வாழ்வுக்கு அனுப்புவதாயின் கைதிகள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அருட்தந்தை சக்திவேல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதாக உறுதியளித்தபோதும் புனர்வாழ்வுக்கு வழங்குவது தொடர்பில் சட்டச்சிக்கல் காணப்படுகிறது. அத்துடன், ஒன்றுக்கு மேற்பட்ட வழக்கு உடையவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியாத நிலையும் காணப்படுகிறது.
நபர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதா அல்லது வழக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய புனர்வாழ்வு வழங்குவதா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறான நிபந்தனைகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தவர்கள் உள்ளனர். அவ்வாறானவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வுக்குச் செல்வதானால் அவர்களுக்கான நஷ்டஈடுகளைப் பெறுவது போன்றவிடயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே நீதிமன்றமே இது விடயத்தில் தீர்மானிக்க முடியும்.” என்றுள்ளார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் சட்டச்சிக்கல் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி விரைவில் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தேசியக் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்: அருட்தந்தை சக்திவேல்