Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தாலும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை அரசாங்கம் அறிவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

“தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியது. நீதிமன்றம் பிணை வழங்கினாலும், பிணை நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத சூழலில் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அரசாங்கம் தொடர்ந்தும் எம்மை ஏமாற்றக் கூடாது. எனவே நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என்றும் தமிழ்த் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 08ஆம் திகதி முதல் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இம்முறை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகவும், உறுதியான தீர்வை ஜனாதிபதி வழங்கும்வரை இது தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் உடனடியாகக் கூடி ஆராயவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல் கைதிகள் முன்வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டிருந்த சிவசக்தி ஆனந்தனிடம், கைதிகள் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

0 Responses to தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: தமிழ் அரசியல் கைதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com