Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுவதில் ஏற்பட்டுள்ள நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு -கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.


வடக்கு - கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் தலைமையிலான மீள் குடியேற்ற குழு எதிர்வரும் இரு வாரங்களில் கூடி அந்த பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள நடைமுறை பிரச்சினைகள் சம்பந்தமாக தேடிப் பார்க்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செலாளர்களின் அறிக்கைகளின் படி மாத்திரமல்லாமல் பிரதேச மட்டத்தில் சென்று பிரச்சினைகள் மற்றும் யோசனைகளுக்கு, தேசிய மீள்குடியேற்ற குழு கலந்துரையாடி தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் யோசனைகளை முன்வைக்க மைத்திரி பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com