அவன்கார்ட் ஆயுதக் கப்பல் நிறுவனத்தை உடனடியாக தடை செய்து, அதனுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் கடற்படையினரிடம் கையளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவன்ட்கார்ட் விவகாரம் தொடர்பில் முடிவு ஒன்றை எட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையடலையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவன்ட்கார்ட் நிறுவனம் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது என்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை தடை செய்யும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் சமீபக்காலமாக பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில், இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து அவர் தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
இந்த பின்னணியில் அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் ஒரு முடிவுக்குவரும் நோக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , பொலிஸ் மா அதிபர் , அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

0 Responses to அவன்கார்ட் ஆயுதக் கப்பல் நிறுவனத்துக்கு தடை: ராஜித சேனாரத்ன