Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கத்தினால் பாரியளவில் பிரசாரம் செய்யப்பட்ட ‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம்’ பிரசார நாடகமேயன்றி வடக்கு மக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கு துணைபோகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்தும் வடக்கு மாகாணத்தின் உற்பத்தி பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 வீதம் மாத்திரமாகும். எனவே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மற்றும் அதை அண்டிய பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2016 ஆம் ஆண்டில் உதவி மாநாடு ஒன்றை கூட்டுவது சம்பந்தமாக ஜப்பானுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மஹிந்த அரசாங்கம் தவறியது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com