Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்பு விழாவில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துக்கொண்டார். அப்போது லாலு பிரசாத் யாதவ், கெஜ்ரிவாலை கட்டி அணைப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதற்கு ஊழலுக்கு எதிரான பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், மாட்டுத்தீவன ஊழல் குற்றச்சாட்டில்குற்றம் உறுதி செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ், கெஜ்ரிவாலை கட்டி அணைப்பது போன்ற படம் குறித்து ஹசாரே கருத்து வெளியிட்டுள்ளார்.

அப்போது நல்லவேளையாக தாம் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றவில்லை என்பது தமக்கு மிக்கவும் மகிழ்ச்சிய அளிக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி பணியாற்றி இருந்தால் தமது பெயரும் இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் என்றும் ஹசாரே தெரிவித்துள்ளார்.ஆனால் லாலுபிரசாத் தாமாக தம்மை கட்டி அணைத்துக்கொண்டார் என்றும், அப்படி கட்டியனைத்துள்ளத்தால் தாம் அந்த கூட்டணியில் இருப்பதாக அர்த்தமில்லை என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

0 Responses to நல்லவேளை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றவில்லை: ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com