தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் முரண்பாடுகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் பேசித் தீர்வு காணப்படும் என்று மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் உயர்பீடத்துக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு: மாவை சேனாதிராஜா