வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பூரண ஒத்துழைப்பாக அமையும் என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு கோடிக் கணக்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
கைத்தொழில், கிராமிய அபிவிருத்தி போன்றவற்றுக்கும் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டு வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுபோன்றதொரு வரவு செலவுத் திட்டம் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
குறிப்பாக, வடக்கு, கிழக்கின் மேம்பாட்டுக்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கிற்கு அதிக நன்மைகளை வழங்கும் வரவு செலவுத் திட்டம்: ரிஷாட் பதியுதீன்