Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை முழுமையாக வெளியேற்றும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஓர் இனச்சுத்திகரிப்பு எனக்கூறி சிலர், தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நிரந்தர பிளவை ஏற்படுத்த சதி செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் முஸ்லிம் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு மற்றும் கிழக்கு என்பது முஸ்லிம் மக்களுக்கும் உரிய தாயகம் என்பதனைக் குறிப்பாக தமிழ் மக்களுக்குள்ள சமத்துவமான உரிமை, முஸ்லிம் மக்களுக்கும் உண்டு என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியிருந்தது. முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக 2002ஆம் ஆண்டில் பகிரங்கமான மன்னிப்புக்கோரியுள்ள புலிகள், முஸ்லிம்களை மீண்டும் வடக்கில் வந்து மீளக்குடியமறுமாறும் அழைத்திருந்தனர்.” என்றுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களை வடக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com