இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து நேற்று புதன்கிழமை செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடாமியில் 'தி இந்து'ஆங்கில நாளிதழ் சார்பில் நேற்று, 'இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவு, 9:00 மணியளவில் கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இராயப்பேட்டை பொலிஸார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்ததுள்ளது. முன்னதாக, எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், தமிழர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதுதொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையின் இறுதி மோதல்கள் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் கடமையாற்றியிருந்தார்.

0 Responses to முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசி தாக்குதல்!