நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்; ‘தமிழர்கள்’ என்கிற காரணத்துக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்னமும் மூன்று நாட்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்து மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் நேரடியாக உயர்நீதிமன்றத்திற்குச் சென்று முற்கூட்டியே பிணைபெற்றுச் செல்கின்றனர். ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் என்பதற்காகவா அவர்கள் விசேடமாக நடத்தப்படுகின்றனர்? தமிழர்கள் என்பதற்காகவா கைதிகள் சிறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளனர்?
தமிழ் அரசியல் கைதிகளை ஒக்டோபர் 31ஆம் திகதி தொடக்கம் விடுவிக்க முடியும் என்றும் நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் பெரும்பாலானவர்களை விடுவிக்க முடியும் என்றும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இன்னமும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. ஆனால் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென அமைச்சர்கள் முந்திக்கொண்டு சொல்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். அவர்களில் பலர் 7 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் மாற்றமொன்று ஏற்படவேண்டும் என்பதற்காகவே நாம் ஆதரவு வழங்கியிருந்தோம். ஊழல் மோசடி ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இந்த அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால் இந்த அரசாங்கம் ஒருவருடகாலம் நீடிக்குமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சிக்குச் சென்று அங்குள்ள மக்கள் சிலருக்கு தங்க நகைகளை மீளக் கையளித்திருந்தார். இந்த தங்க நகைகள் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதாவது 2009ஆம் ஆண்டு மீட்கப்பட்டவை. இவை சுமார் ஐந்து வருடங்களாக எங்கே வைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட நகைகளில் பத்தில் ஒரு பகுதி கூட மக்களுக்கு வழங்கப்படவில்லை. எஞ்சிய நகைக்கு என்ன நடந்தது எனக் கேட்க விரும்புகின்றோம். எமது மக்களின் நகைகள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன. மக்களின் நகையை முன்னாள் ஜனாதிபதி என்ன செய்தார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர்கள் என்பதற்காக அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: எம்.ஏ.சுமந்திரன்