நாட்டுமக்களுக்கு பாஜக ஆட்சியில் பொற்காலத்தைத் தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்த மோடி வரும் நாட்களை இருண்ட நாட்களாக்கி உள்ளார் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, பீகார் மக்கள் சிறந்த நீதிபதிகளாக இருந்து, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்துள்ளனர் என்று கூறினார். மோடி அரசின் மதவாத துஷ்பிரயோகமே பீகாரில் அக்கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு பொற்காலத்தைத் தருவதாக மக்களவைத் தேர்தல் வாக்குறுதி அளித்த நரேந்திர மோடி, எதிர் வரும் நாட்களை இருண்ட நாட்களாக எதிர்க்கொள்ள வைத்துள்ளார் என்றும் லாலு குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் ஹரியானாவில்,மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட முதியவரின் மகன் பீகாரில் பாஜகவின் தோல்விக் குறித்துக் கூறுகையில், பீகாரில் பாஜகவின் தோல்வி தமது தந்தையின் ஆத்மாவை சாந்தியடையச் செய்யும் என்று கூறியுள்ளார்.

0 Responses to பொற்காலத்தைத் தருவதாகக் கூறிய மோடி வரும் நாட்களை இருண்ட நாட்களாக்கி உள்ளார் :லாலு