Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நாளை இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட உள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்க்களும் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தமது தீபாவளி வாழ்த்துக்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மக்களைத் துன்புறுத்தி வந்த நரகாசுரன் எனும் அரக்கனை ஒழித்த நாள் இன்று. இந்த நாளில் தமிழக மக்கள் தங்களது இல்லங்களில் இருள் விலகி ஒளி நிறைந்த நாளாக, தீபங்கள் ஏற்றி கொண்டாடி மகிழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வளம் நிறைந்த நாளாக இந்நாளைக் கொண்டாட வேண்டும் என்றும், மக்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற தாமும் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com