வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குதல் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்களை மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தான் எந்தவித நிலைப்பாடும் எடுக்காமல் நடுநிலை வகிப்பதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலிய ஊடகமொன்றிடம் கருத்து தெரிவித்துள்ளமை மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சரை நீக்குமாறு கோரும் விடயத்தில் நான் அவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயற்படமாட்டேன். அது கட்சியின் நிலைப்பாடு.
அமைச்சரவையை மாற்ற வேண்டும் என சுமார் 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வாயிலாக அறிந்தேன். அந்த விடயத்தில் நான் நடைபெறும் விடயங்களை அவதானிப்பனாக இருப்பேனே தவிர, சரி பிழை தொடர்பில் கருத்துத்தெரிவிக்க மாட்டேன். இதுவே எனது பதவிக்குரிய நிலைப்பாடு ஆகும்.” என்றுள்ளார்.

0 Responses to முதலமைச்சர் நீக்கம்- அமைச்சர்கள் மாற்றம் தொடர்பில் நடுநிலை வகிக்கின்றேன்: சி.வி.கே.சிவஞானம்