மத்தியக் குழு விரைந்து பார்வையிட்டு விரைவில் வெள்ள சேத அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் வெள்ள பாதிப்புக் குறித்து நேரில் பார்த்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் பிரசாத் தலைமையில் சென்னை வந்துள்ளது. இவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெயலலிதா, மழைக்குத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையும், 9ம் திகதி கடலூரில் ஒரே நாளில் அதிக அளவில் கொட்டித் தீர்த்த மழையும் என்று மழை பெய்துள்ளதால், வெள்ள பாதிப்பு என்பது தவிர்க்க இயலாததாகி விட்டது என்றும் ஜெயலலிதா மத்தியக் குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார்.
எனவே, மத்தியக்குழு விரைந்து பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார் ஜெயலலிதா. இந்தக் குழுவில் மின் வாரியத்துறை, சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் உள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to விரைவில் வெள்ள சேத அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்ப்பிக்க வேண்டும்: ஜெயலலிதா