Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்க பாலுவை விமர்சிக்க, அதற்கு தங்கபாலு விளக்கம் அளிக்க என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வலுக்கிறது உட்கட்சிப் பூசல்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த உறுப்பினர்கள் ப.சிதம்பரம், குமரி அனந்தன், தங்க பாலு உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி இவர்களை சந்தித்து, காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் எப்படி முன் எடுத்துச் செல்வது, சட்டபேரவைத்தேர்தலை எப்படி எதிர்க்கொள்வது என்பதுக் குறித்து விவாதிக்கச் சென்றதாக தங்கபாலு இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதற்குள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தம்மைப் பற்றி மற்றும் கட்சியின் மற்ற மூத்தத் தலைவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார் என்றும், இது காங்கிரஸ் கட்சிக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு அழகல்ல என்றும் கூறியுள்ளார்.

அதோடு தமது சொத்துக்குவிப்புக் குறித்து நேரில் விவாதிக்கத் தயாரா என்றும் இ.வி.கே.எஸ் இளங்கோவன் சவால் விடுத்துள்ளார் என்றும், தாம் அதற்குத் தயராக இருப்பதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.அதோடு கோவன் பாரதம் போற்றும் தலைவரான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்தும், துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்தும் மிக அவதூறாகப் பாடல்களைப் பாடியவர். அவரின் கைதுக்கு இவர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துகிறார் என்றும், அவரவர் கட்சித் தலைவர்களை எவர் விமர்சித்தாலும் அவர்களுக்கு எதிர்ப்புத்தான் கிளம்பும் என்கிற நிலையில், இவர் எப்படி தங்கள் தலைமைக்கே துரோகம் செய்யும் வகையில் போராட்டம் நடத்தலாம் என்றும் தங்க பாலு கேள்வி எழுப்பியுள்ளார். இப்படியாக தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.

0 Responses to தமிழக காங்கிரஸ் கமிட்டியில் வலுக்கிறது உட்கட்சிப் பூசல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com