Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் வரையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ஆதரவு அணியினரை பிரதான எதிர்க்கட்சியான ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானோரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அளிப்பவர்களை எதிர்க்கட்சி ஆசனங்களில் அமருவதற்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க விரும்பவில்லை. தங்களை எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர அனுமதிக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே, அவர்களுக்கு எதிர்க்கட்சி ஆனசங்களில் அமர அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று எஸ்.பி.திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த ஆதரவு அணியை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்க முடியாது: எஸ்.பி.திசாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com