காணாமற்போனோர் மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 09ஆம் திகதி (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
காணாமற்போனோர் மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்டோர் செயற்குழுவின் ஐக்கிய நாடுகள் உப தலைவர் பேர்னார்ட் டூஹெய்ம் தலைமையில் ஐந்து பிரதிநிதிகளடங்கிய குழுவே திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. இக்குழுவானது எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
மேலும் இக்குழு, கொழும்பில் 05 நாட்களும் வெளி மாவட்டங்களில் ஏனைய நாட்களிலும் தங்க ஏற்பாடாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 09, 10, 16, 17, 18 ஆகிய திகதிகளில் கொழும் பிலும் ஏனைய நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக் களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலுமிருந்து இக்குழு செயற்பட வுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை விரிவாக ஆராயும் இக்குழு, அது குறித்த தமது அறிக்கையினை 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமென்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே கூறியுள்ளார்.
அத்தோடு, இக்குழு காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்த மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் தலைவரை சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள எதிர்கால செயற்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கும் உதவி செய்யும் நோக்கில் மனிதாபிமான அடிப்படையிலேயே இக்குழுவின் விஜயம் அமையவுள்ளதாக சுட்டிக்காட்டிய கொலன்னே, குற்றவிசாரணை மேற்கொள்வது இவர்களின் நோக்கமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா. விசேட குழு இலங்கை வருகை: மஹேஷினி கொலன்னே