தமிழக அகதி முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கும் தேவையைான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க வேண்டும் என்று ஈழ அகதிகளுக்கான மறுவாழ்வு மையத்தினைச் சேர்ந்த எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து கருத்தரங்கு சென்னை மியூசிக் அகடமியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சி.சந்திரஹாசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 35 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் மீது இந்திய அரசும், தமிழக அரசும் மிகவும் பெருந்தன்மையுடனும் கரிசனத்துடனும் நடந்துகொண்டுள்ளன. எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதால் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பெரும்பான்மையான மக்கள் இலங்கை திரும்பி தம் உரிமைகளை பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசும், தமிழக அரசும் செய்ய வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவில் இருப்பதும் இலங்கை திரும்புவதும் அவரவரின் தனிப்பட்ட முடிவு. ” என்றுள்ளார்.

0 Responses to தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப இந்தியா உதவ வேண்டும்: எஸ்.சி.சந்திரஹாசன்