தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட குழு அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த நீதியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட குழுவொன்றை அமைத்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புபடாதவர்கள், நம்பகத்தன்மைவாய்ந்த ஆதாரங்கள் இல்லாதவர்கள், பிணை வழங்குவதற்கான சாத்தியம் தென்படுபவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நாம் இணங்கியுள்ளோம்.
மேல்நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை காலதாமதமின்றி விரைவில் விசாரிப்பதற்கான புதிய நீதிமன்றக் கட்டமைப்பொன்றை அமைத்து விசாரணைகளை துரிதப்படுத்தவுள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் விசேட குழு மூலம் ஆராயப்படுகின்றது: விஜயதாச ராஜபக்ஷ