Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போலீஸ் வேண்டிய அளவுக்கு என்னை விசாரித்து விட்டார்கள் என்று மதுவுக்கு எதிரான பாடல் பாடிய கோவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் கலை இயக்கம் சேர்ந்த கோவன் மதுவுக்கு எதிராக ஊத்தி கொடுத்த உத்தமி என்கிற பாடலை பாடியதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.இவரை விசாரித்து புழல் சிறையில் அடித்துள்ள நிலையில் நேற்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது கொவனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர் மீது தேசிய நலனுக்கு எதிராகப்பாடல் பாடியதாக குற்றம் பதிவு செய்யப்படாத நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்து அவரை மீண்டும் புழல் சிறையில் வைக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். இடையில் கோவன் கைதுக்கு விளக்கம் அளித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.

கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது,தம்மை வேண்டிய அளவுக்கு போலீசார் விசாரணை செய்துவிட்டார்கள் என்றும், எனவே, போலீஸ் காவலில் தாம் இருக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.. அதோடு, போலீஸ்காவலில் தாம் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறியுள்ளார்.விடுதலையானாலும், தொடர்ந்து மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துப் பாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to போலீஸ் வேண்டிய அளவுக்கு விசாரித்து விட்டார்கள்: கோவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com