மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லை. அதேபோல, பிரதமர் பதவிக்கான ஆசையும் தன்னிடம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, "ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன். அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவேண்டும். அதற்காக என்னை அர்ப்பணிப்பேன்.” என்றுள்ளார்.

0 Responses to மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்; பிரதமர் பதவிக்கும் ஆசையில்லை: ஜனாதிபதி மைத்திரி