Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 25 வீதமானவை மாத்திரமே விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வடக்கில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பரணகம பி.பி.சி.யிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு வடக்கு- கிழக்கு மாவட்டங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தியிருந்தது. இப்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறியப்படுகிறது.

மேலும், ஆயிரக்கணக்கானவர்களிடம் இன்னும் விசாரணைகளை நடத்த வேண்டியதுள்ளது எனவும் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார். பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து சுமார் ஐயாயிரம் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழர் தரப்பிலிருந்து 16,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் வந்துள்ளன. அவற்றில் 4000 பேர் தொடர்பான விசாரணைகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. தமது ஆணைக்குழுக்கு இப்போது கூடுதலாக இரண்டு ஆணையளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடி விடயம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று தமது ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தாலும், அது குறித்து முடிவெடுப்பது அரசால் எடுக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் தீர்மானம் எனவும் மக்ஸ்வெல் பரணகம் கூறியுள்ளார்.

0 Responses to வடக்கில் கிடைத்த முறைப்பாடுகளில் 25 வீதமானவற்றையே பரணகம ஆணைக்குழு விசாரித்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com