நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை.
நாங்கள் எங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய இனம் எங்களது பிள்ளைகள் எங்களது உறவுகள் எங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தச் சென்றவர்கள் அவர்களை நாங்கள் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. என மாவீரர்களின் தாயார் கதறுகின்றார்கள்.
ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகள். அவர்கள் இறந்தால் அவர்களை நினைத்து அழுவதற்கு எமக்கு உரிமை வேண்டும். எங்கள் இனத்தில் இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயிரிழந்து உள்ளார்கள். அவர்களை நினைத்து ஒரு விளக்கு கூட ஏத்தக் கூடாது என கூறுவது என்ன நியாயம்?
எங்களின் உள்ளக் குமுறல்களை அடக்கியாள நினைப்பதுதான் நல்லாட்சியா? இதுதான் அரசின் நல்லிணக்கமா? என உயிரிழந்த விடுதலைப்புலி போராளிகளின் தாய்மார்கள் தங்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்
மாவீரர் மாதமான இந்த மாதத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் உயிரிழந்த தங்களது மகன்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதாகவும், ஆனால் கடந்த பல ஆண்டகளாக அவர்களுக்கு ஒரு விளக்கு கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியவில்லை.
மேலும், தங்களது உறவினர்களை புதைத்த புதைகுழிகளை இராணுவம் அழித்துவிட்டதால் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு நினைவிடம் கூட இல்லை என்றும், தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்திய வயதான தாய்மார் சிலர் தங்கது செய்திகளையோ தங்களையோ வெளிக்காட்ட வேண்டமெனவும் முடிந்தால் தங்களது உள்ளக் குமுறல்களை உலகிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
அவர்கள் கேட்பது நியாயமா?
முதலில் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு இனங்களைச் சேர்ந்த போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான சமமான உரிமையை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவுள்ளது.
அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கினால் நாட்டில் நல்லிணக்கம் உருவாகுவதற்கு சிறந்த வழியாக இருக்கும். முதலில் தமிழ் மக்களை ஒரு இடத்தில் கூடி ஒப்பாரிவைக்க விடுங்கள். அவர்களின் ஆழ்மனங்களுக்கு உள்ளே பதிந்து கிடக்கும், தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள்.
தமிழ் மக்கள் தங்களது 30 வருட அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும். அவர்கள் அழாதவரை அவர்களின் இருமாப்பக்களும் நெஞ்சுரமும் இன்னும் அதிகரிக்குமே தவிர அது குறையப்போவதில்லை.
எனவே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். நல்லாட்சி அரசே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். இதுவே தமிழர்கள் மனதில் ஆழப்பதிந்து கிடக்கும் ஏக்கம். எனவே ஒரு முறை அவர்களை அழ விடுங்கள்.
கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குழுங்கும் கார்த்திகை மாதமென்றால் வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான மாதமாகும். ஒருபுறம் தமிழ் கடவுளாக முருகனுக்கு கார்த்திகை தீபம். மறு புறம் தமிழர்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து ஆகுதியான மாவீரர்களுக்கான மாவீரர் நாள்வாரம் எனக் கார்த்திகை மாதம் தமிழர்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த மாதமாக திகழ்கின்றது.
கடந்த இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் நாள் போன்றவற்றையெல்லாம் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்றி உணர்வு பூர்வமாக அனுஸ்டித்துவருவதாக கூறி இலங்கை இராணுவம் இந்த கார்த்திகை தீபம் ஏற்வதற்கெ தடைவிதித்து வந்திருந்தது.
தமிழர்களின் உணர்வுகளை எப்படியெல்லாம் அடக்கியாள சிங்கள தேசம் முற்பட்டாலும் அது வேறோரு வடிவம்பெற்று வெளிவந்தமையே அதிகம். அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் தங்களின் உயிர் நீத்த பிள்ளைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் வானத்தில் இருந்து நேரடியாக குதித்தவர்களோ அல்லது வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழ் பிள்ளைகள்.
எப்படி சிங்களத் தாய்க்கு இராணுவ வீரன் ஒருவன் எப்படிப் பிள்ளையோ, அப்படித்தான் தமிழ் தாய்க்கு விடுதலைப்புலி வீரன் ஒரு பிள்ளை இதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்வேண்டும் இதை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படி கொடுக்கப்போகின்றது?
எனவே தமிழர்களிடம் தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள். தமிழ் மக்கள் தங்களது பல்லாண்டுகால அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும் அதற்கான சுதந்திரத்தை பெற்றுக்கொடுங்கள்.
மரணித்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? கதறியழுத தாய்
போராட்டத்தில் உயிர் நீத்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இந்த நல்லாட்சியில் அனுமதி கிடைக்குமா என ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றாள் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாய்.
தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த துயரத்தில் இருந்த தாய்க்கு தனது கணவனையும் இழக்க நேரிட்டது, இதனால் மிகவும் மனமுடைந்து தனது வீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படத்துக்கு கூட விளக்குகொழுத்த பயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது இறந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை, என்னைப் போன்று இன்று எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் தங்களின் மகள் மற்றும் மகன், கணவன்மார்களின் உருவப்படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு.
எங்களின் மனதில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவேண்டுமாயின், நாங்கள் கேட்கும் இந்த கோரிக்கையை செவிமடுத்து நல்லதொரு பதிலை தெரிவிக்க வேண்டுமென்றார்.

0 Responses to ஒருமுறை ஒன்றாய் கூடி எங்களை அழவிடுங்கள்!