Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.

இந்த நிறுவனத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லட்டு கொடுத்து தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.

அசோக் லேலண்டன் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழீழ உணர்வு தொழிலாளர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு லட்டு வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்பித்ததுடன், அனைவருக்கும் அவரது கையால் லட்டுகளையும் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களும் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

0 Responses to சென்னையில் பிரபாகரனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய தொழிலாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com