சிபிஐ விசாரனைமுடிவடைந்த நிலையில் 14 நாள் காவலில் சோட்டா ராஜன் முக்கியஸ்தர்கள் அடைக்கப்ப்படும் உயர் பாதுகாப்பு அடங்கிய திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து பின்னர் பிரிந்த சோட்டா ராஜன், இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரிடம் கடந்த சில நாட்களாக சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், இனி தேவைப்பட்டால் மட்டும் காவலில் எடுத்து விசாரிப்பதாக சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து சோட்டா ராஜன் 14 நாள் காவலில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சோட்டா ராஜன் மீது போலி பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட 21 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. விசாரணையில் பல உண்மைத்தகவல்கள் கிடைத்து உள்ளதாகவும், தாதாக்களின் நிழல் உலக செயல்பாடுகள் குறித்தத் தகவல்களும் கூடிய மட்டும்கிடைத்துள்ளன என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சோட்டா ராஜன் முக்கியஸ்தர்கள் அடைக்கப்படும் திஹார் சிறையில்...