Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் இனப்படுகொலை செய்தார்கள் என்றும். அதற்காக தான் வெட்கப்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது அவர் குறிப்பிடுவது, புலிகள் யாழில் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்பாக வெளியேற்றிய விடையத்தை தான். இவர் யாரின் தலைவர் என்று தெரியவில்லை. மட்டக்களப்பு வீரமுனை கிராமத்தின் படுகொலை தெரியுமா இவருக்கு? பிறந்த குழந்தை முதல் வயோதிபர்வரை வெட்டி படுகொலை செய்தது முஸ்லிம் ஊர்காவல் படை. இது கூடாவா இவருக்கு நினைவில்லை?

பின்னர் சந்துருகொண்டான், வந்தாறுமூலை, உடும்பன்குளம் ,சவளக்கடை வளத்தாப்பிட்டி, திருக்கோவில், செங்கலடி, எழுவான்கரை, என்று பல இடங்களில் நடந்த படுகொலைகளோடு முஸ்லீம் ஊர்கவல் படைக்கும் தொடர்பு இருந்தது, பலருக்கும் தெரியும். ஆனால் யாழில் புலிகள் முஸ்லீம்களை வெட்டிக் கொலைசெய்யவில்லை. மாறாக அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினார்கள். மேல் குறிப்பிட்ட எந்த ஒரு கொலைக்கும் இதுவரை எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் மன்னிப்புக் கோரியதே இல்லை என்பதனையும் தமிழர்கள் நன்றாக அறிவார்கள். இதனை நாம் சொல்லி புரியவைக்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்த கசப்பான அனுபவங்களை நாம் மறந்து. கடந்த காலத்தை சற்று ஒதுக்கிவைத்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும் வேளையில், புலிகள் இன சுத்திகரிப்பை செய்ததாக இந்த தமிழ் தேவாங்கு சொல்கிறது. இதனை எங்கே போய் சொல்ல? இவன் எல்லாம் தமிழன் தானா? தெரியவில்லை? இவன் யாருக்கு தலைவனாக உள்ளான் என்று தெரியவில்லை.

0 Responses to விடுதலைப்புலிகளின் இனச் சுத்திகரிப்பு குறித்து நான் கவலை கொள்கிறேன் என்கிறார் இந்த துரோகி சுமந்திரன் MP!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com