Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை (பெப் 29) ஆரம்பித்து, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இக்கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து உரையாற்றவுள்ளார். அவருடைய உரையில், அண்மையில் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் குறித்து குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி வரை உயர்மட்ட தலைவர்களின் உரைகள் இடம்பெறவிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள், புவி வெப்பமடைதல், உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இந்தக் கூட்டத் தொடரின் பிரதான அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படாதபோதும், ஆணையாளரின் இலங்கை விஜயம் பற்றிய கருத்துக்கள் கலந்துரையாடல்களுக்கு உள்ளாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை தொடர்பில் பிரதான அமர்வுகள் இல்லை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com