ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘செங்கை ஆழியான்’ என்கிற கலாநிதி கந்தையா குணராசா (வயது 75) இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சுகயீனம் காரணமாக காலமானார்.
1941 ஜனவரி 25ஆம் திகதியன்று பிறந்த செங்கை ஆழியான், ஈழத்து வரலாறு சார் புனைகளையும், ஆய்வுகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
‘ஈழநாடு’ பத்திரிகையில் அவர் எழுதிய தொடர்கதையான ‘கிடுகுவேலி’ வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானது. அவரது ‘வாடைக் காற்று’ மற்றும் ‘புதினம்’ ஆகிய படைப்புக்கள் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.
கந்தையா- அன்னமாளின் 8வது பிள்ளையான செங்கை ஆழியான், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கிளிநொச்சி அரசாங்க அதிபராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் அரச பணிகளை ஆற்றியவர்.

0 Responses to ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!