தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில் தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பந்தினை எமது பக்கம் தட்டி விட்டுள்ளார். இதன்மூலம், அவர் தப்பித்துக் கொள்ள முனைகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்குமாறு கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது, சமஷ்டி கொடுக்க முடியாது, ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு எனக் கூறிவருகின்றமையானது, புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை முன்வைத்திருக்கும் அரசியலமைப்பு யோசனை வரைபு தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வு வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழீழம் இல்லாத நிலையில் தமிழ் மக்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெளிவாக முழுமையாக முன்வைக்காத ஒரு சூழல் இருந்து வந்தது. இதனால் அரசாங்கம் ஒரு அரசியல் சாசன சபையை உருவாக்க சிந்தித்தது. அதனால் அந்த சபைக்கு தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருந்தது. அதனால் தான் நாம் தமிழ் மக்கள் பேரவை மூலம் ஒரு நிபுணர் குழுவை நியமித்து இந்த தீர்வு திட்ட வரைபை தயாரிக்கவேண்டி ஏற்பட்டது.
இன்றைய பத்திரிகைகளில் நீங்கள் பார்த்தால் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு தீர்வுத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை என்பது தெளிவாகும். நீங்கள் முன் வையுங்கள் என்று தொடர்ச்சியாக சம்மந்தனோ ஏனைய கட்சிகளோ எங்களிடம் தான் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் முன்வைப்பதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். அதனால் அவர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கட்டும். நாங்கள் அதனை ஆராய தயாராகவே உள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
குறிப்பாக சொல்லப் போனால் அவர் பந்தை எமது பக்கம் தட்டிவிட்டுள்ளார். நீங்கள் தீர்வுத் திட்டத்துடன் வாருங்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு முன்பாக அவர்கள் வடக்கு- கிழக்கை இணைக்க முடியாது, சமஷ்டி கொடுக்க முடியாது, 13 திருத்தம், ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்ற ஒரு மனநிலையிலே தான் அவர்கள் இருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் ஒரு அரசியல் சாசன மாற்றம் முழுமையாக வருமா? அல்லது தற்போதைய ஒற்றையாட்சி சாசனத்தில் சில திருத்தம் கொண்டு வரப்படுமா? என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த பாராளுமன்ற விவாதத்தில் புதிய அரசியல் சாசனம் என்பதில் புதிய என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் மாற்றம் என்றே பேசப்படுகிறது.
அரசியல் சாசன சபையை நிறுவது தொடர்பாக கடந்த மாதம் இரண்டு நாட்கள், இந்த மாதம் இரண்டு நாட்கள் சபையில் விவாதங்கள் நடந்தும் இன்னும் வாக்கெடுப்புக்கு செல்லவில்லை. அடுத்த மாதம் தான் வாக்கெடுப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது. வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ்த் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளும் கட்சி இரண்டும் சேர்ந்து கொண்டு வரப்போகின்ற அரசியல் சாசன சபை ஒரு புதிய அரசியல் அமைப்பை கொண்டுவரப்போகிறதா அல்லது இருக்கின்ற அரசியல் சாசனத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரப்போகின்றதா என்பது பெரிய கேள்வியாகவுள்ளது.
இப்பொழுது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கிறார். அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எல்லோரிடமும் தொடர்புகளை பேணி வருகிறார்.
அதனால் எவ்வாறான அரசியல் சாசனம் கொண்டுவரப்படப்போகிறது என்பது எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும். சம்பந்தன் கூட தெளிவாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும், சமஷ்டி அரசியல் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடுவது உண்மையாக இருந்தால், புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதன் மூலமே அதனை செய்ய முடியும்.
சமஷ்டி இல்லாவிட்டால் சம்பந்தன் பேச்சுவார்த்தையை கூட ஆரம்பிக்க முடியாத சூழலை ஏற்படுத்தும். ஆகவே, இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்புக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசன சபையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருகின்ற போது அங்கு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்குள் ஒரு உடன்டபாடு ஏற்பட்டிருந்தால் நான்கு நாட்கள் விவாதம் தேவையில்லை. இரண்டு நாட்களுடன் வாக்கெடுப்பு கொண்டு போயிருக்கலாம்.
இது தவிர, அரசியல் சாசன சபை ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால், அதில் உள்ள 225 பேரில் 16 பேர் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமை சார்ந்தவர்கள். இதனால் 16 பேர் கூறுவது எடுபடுமா என்று ஒரு கேள்வி இருக்கிறது. ஏனென்றால், ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திகட்சி என்பன வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களை எதிர்க்கும்.
இதனால் தான் நாங்கள் சில விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரைவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். இதில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அதனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வழங்கவுள்ளோம். இந்த தீர்வுத் திட்டத்தை சரி என்று ஏற்றால் சம்பந்தன் கூட சேர்ந்து இதனை இன்னும் வலுப்படுத்தி அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to தீர்வு விடயத்தில் ரணில் பந்தினை எமது பக்கம் தட்டி விட்டுள்ளார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்