Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளின் பிரகாரம் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பழிவாங்கல்களுக்கு இலக்கான சுமார் 30,000 பேர் பேர் இந்த குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மஹிந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com