Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹாலிவுட் நடிகையும் ஐ.நா அகதிகள் பிரிவின் நல்லெண்ணத் தூதுவருமான ஏஞ்சலினா ஜூலி செவ்வாய்க்கிழமை லெபனானில் மோசமான நிலையில் தங்க வைக்கப் பட்டுள்ள சிரிய அகதிகள் குடும்பங்களைப் பார்வையிட்டுள்ளார். சிரிய யுத்தம் தொடங்கி 5 ஆண்டு நிறைவில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதன் பின் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஏஞ்சலினா, சிரிய யுத்தத்தால் ஐரோப்பாவில் நுழைய முற்படும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது பிரச்சனைக்குரிய விடயம் தான். ஆனால் அதைவிட அதிகளவில் மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் தஞ்சம் புகுந்து வரும் அகதிகள் முகம் கொடுக்கும் அழுத்தம் அதிகமாகும் என்றுள்ளார். மிக மோசமான போர் சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய போதும் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியவில்லையே என்று வருத்தப் படும் குடும்பங்களை அதிகளவில் பார்வையிட்ட போது தான் மிகவும் மனம் நெகிழ்ந்ததாகக் கூறும் ஏஞ்சலினா இக்குடும்பத்தினருக்கு உதவ முன்வருமாறு சர்வதேசத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளார். மேலும் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் அழுக்கு நிறைந்த தண்ணீர்த் தொட்டியைப் பாவிப்பதால் நோய் வாய்ப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கும் உடனடி உதவி தேவை என்றும் விண்ணப்பித்துள்ளார்.

லெபனானில் அதிகபட்சமாக சுமார் 5 மில்லியன் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏஞ்சலினா ஜுலி மேற்குலகம் அகதிகள் விவகாரத்தில் கவனமாகவும் அமைதி மற்றும் தெளிவான பார்வையுடனும் செயற்பட வேண்டும் என்று கோரியதுடன் லெபனானில் உள்ள சிரிய அகதிகள் எதற்கும் அஞ்சாது திடசித்தத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

0 Responses to எதற்கும் அஞ்சாத திடசித்தம் வேண்டும்!:லெபனான் சிரிய அகதிகளிடம் ஏஞ்சலினா ஜூலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com