Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 14வது நாளாகவும் தொடர்கின்றது.

இதனிடையே, உண்ணாவிரதிகள் நால்வரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்கண்டு நேமிநாதன் (வயது - 43) யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கச்சாய், அகஸ்ரின் ஞானசீலன் (வயது 28) முல்லைத்தீவு - உடையார்கட்டு, பாலசுந்தரம் மனோகரன் (வயது 42) கிளிநொச்சி ஆகியோரின் உடல்நலம் மோசமடைந்ததால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை, சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் (வயது 37 யாழ்ப்பாணம் - மானிப்பாய்) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது; நால்வர் வைத்தியாசாலையில் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com