சனிக்கிழமை தென் ரஷ்யாவின் ரொஸ்டொவ்-ஒண்-டொவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய ஃப்ளை டுபாயின் போயிங் 737-800 ரக பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 62 பேரும் கொல்லப் பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 இந்தியர்களும் அடங்குவதாகவும் தெரிய வருகின்றது.
விமானம் ரஷ்யாவில் தரை இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் இதில் 44 ரஷ்யர்களும், 8 உக்ரைனியர்களும், இரு இந்தியர்களும் ஒரு உஷ்பெகிஸ்தான் நாட்டவரும் பலியாகி இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. குறித்த விமானம் ரன்வேயில் இருந்து 243 மீட்டர் அப்பாலேயே வீழ்ந்து விபத்தில் சிக்கிய போதும் மீட்புப் பணிக்காக ஞாயிறு வரை தற்காலிகமாக விமான நிலையம் மூடப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 2008 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்ட FlyDubai விமான சேவை நிறுவனம் குறைந்த செலவில் பயண டிக்கெட்டு வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

0 Responses to ரஷ்ய விமான விபத்தில் இரு இந்தியர்கள் உட்பட 62 பேர் பலி!